Sunday 28 December 2014

8 அண்டுகளுக்குப் பின் மேலும் இரண்டு அப்பாவி முஸ்லிம்கள்?

சுதந்திரதின விழாவைக் குடியரசு தின விழாவென்று டெல்லியைத் தகர்க்கத் திட்டம். வங்காள தேசத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் இரண்டு பேர் கைது.

டெல்லி சிறப்புக் காவலர்கள் அதிரடி சாதனை நாட்டுக்கு வந்த ஆபத்து நீங்கியது காவல்துறை பெருமிதம் விரிவான செய்திகள் இடைவேலைக்குப்பின்..........

இப்படி ஒரு அதிர்ச்சியை நமக்குள் ஏற்படுத்தி நம்மைத் தொலைகாட்சியோடு பிணைத்து இடைவேளை என நமக்கு விளம்பரங்கள் பலவற்றைக் காட்டினார்கள். எப்போது இந்த விளம்பரங்கள் தொலையும்  இந்த செய்தி மீண்டும் வரும் என்று அலுத்துக் கொண்ட நமக்கு செய்திகள் தொடரும் எனச் சொல்லி - இரண்டு முஸ்லிம்களைக் காட்டினார்கள்.

அவர்கள் இருவரும் பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்த அபார தீவிரவாதிகள். பங்களாதேஷிலிருக்கும் (HUJI) ஹீஜு என்ற அதிபயங்கர அமைப்பைச் சார்ந்தவர்கள் எனத்தொடங்கி, ஜனவரி 26 ஆம் நாளில், நம் நாட்டில் நடக்கவிருக்கும் குடியரசு தினவிழாவில் பயங்கர தாக்குதலை நடத்த (610 கிராம்) ஒரு கிலோ வெடிபொருட்களுடன் (PETN வகை) அலைந்து கொண்டிருந்தனர். என்று விரித்தார்கள்.

நம் நாட்டு செய்தி நிறுவணங்களுள் ஒன்றான "பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா" (PTI : Press Trust Of India) இந்த செய்திக்கு இன்னொரு முகத்தைத் தந்தது. அது கைதுசெய்யப்பட்ட முஹம்மத் அமீன் வானியும் லுத்தூஃப் உற்றஹ்மானும் பாகிஸ்த்தானிலுள்ள "ஜம்மியத்துல் தஅவா" என்ற அதிசய அமைப்பின் தலைவர் ஹபீஸ் செய்யித் என்பவரிடம் பயிற்சி பெற்றவர்கள். இதையும் நமது தொலைகாட்சிகள் நமக்கு விரிவாக விளக்கிக் காட்டின. ஹபீஸ் ரஹ்மான் தரும் பயிற்சி உலகில் யாரும் விஞ்சிட இயலாத பயிற்சி என்பதை சொல்லாமல் சொன்னார்கள்.

சாதனை படைத்த பெருமையோடு நமது டெல்லி சிற்ப்புக் காவலர்களும் சாய்ந்து தொங்கி முகத்தோடு குற்றம் சுமத்தப்பட்டவர்களும் நமக்கு தொலைகாட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டார்கள். அடுத்த நாள் பத்திரிக்கைகளும் டெல்லியை தாக்கிட வந்த முஹம்மத் அமீன்வானி அவர்களையும் லுத்துஃப் ரஹ்மானையும் படம்போட்டுக்காட்டி இவர்களிடமிருந்து டெல்லியை காப்பாற்றிய நமது சிறப்புக் காவல்படையினரை வானாளப் புகழ்ந்திருந்தனர். இதுவெல்லாம் ஜனவரி திங்கள் 4 ஆம் நாள் 2007 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய செய்திகள்.

செய்திகளைப் படிப்பவர்கள் இவர்கள் மீதும் இவர்களின் மூலம் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். என்பதற்காக, கதையை இன்னும் கொஞ்சம் அதிகமாக தீர்த்துக் கட்டினர். அது முஹம்மத் அமீன் வானி என்பவரிடம் [ரூபாய் 4,50,000] அதாவது நான்கு இலட்சத்து நாற்பதாயிரம் ரொக்கமாக இருந்தது என்பதே அந்த திகில். இது டெல்லியிலுள்ள சாந்திஸி சவுக் என்னுமிடத்திலுள்ள ஓர் கவ்வாலா - பணமாற்று வியாபாரியிடமிருந்து பெற்றது. இந்த பணம் இந்தியாவின் மீது போர் தொடுப்பதற்காக ஹூஜீ எனும் அமைப்பு கொடுத்தனுப்பியது என்றும் அனல் பறக்கும் செய்திகள்.

அவர்கள் செய்தியில் காட்டிய பரபரப்பு நமக்கு இது உண்மையாகத்தான் இருகும் என்பதைத் தெளிவாகக் காட்டிற்று. எனினும் உண்மைகள் கையில் கிடைக்கும்வரை பொருத்திருப்பதே சிறந்தது எனப்பட்டது. ஆனால் காத்திருப்பது என முடிவு செய்தோம். இப்போது எட்டு ஆண்டுகளுக்குப்பின் அந்த உண்மைகள் கைவரப்பெற்றோம். அதனை இங்கே அப்படியே தருகின்றோம்.

ஹூஜீ என்ற அமைப்பு

ஹூஜீ என்ற அமைப்பின் முழுப்பெயர் ஹரகத்துல் ஜிஹாத் அல் இஸ்லாமி  Harakath Ul Jihad al Islamiya என்றொரு அமைப்பு நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் இருப்பதாக நமது ஊடகங்கள் நமக்கு சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் சொல்லும் செய்திக்கு ஆதாரமாக நமது உளவுத்துறையைத்தான் ஆதாரமாகக் காட்டுகின்றன. ஆனால் அப்படியொரு அமைப்பு வங்காள தேசத்தில் இல்லையென வங்காள தேச அரசு தொடர்ந்து கூறிவருகிறது. அதுவும் ஆதாரப்பூர்வமான அறிவுப்புகள். [Source : Radiance.viw weekly 26th Oct - 2014] ஆனால் உளவுத்துறையினர் தொடர்ந்து ஹூஜீ என்றொரு அமைப்பை கற்பனையில் உருவாக்கி ஊடகங்கள் வழி ஊரெல்லாம் விளம்பி வருகின்றது.

அப்படியானால் உண்மைதான் என்ன?

டெல்லிய தகர்த்திட வந்த மிகப்பெரிய தீவிரவாதிகளாகக் காட்டப்படுபவர்கள், அப்பாவிகள். அவர்கள் காஷ்மீரை சார்ந்த சாதரண மக்கள். ஆனால் முஸ்லிம்கள். முஸ்லிம் இளைஞர்களே இல்லாத ஒரு காஷ்மீரை உருவாக்கிட வேண்டும். காலப்போக்கில் முஸ்லிம்களே இல்லாத ஒரு காஷ்மீரை உருவாக்கிட வேண்டும் என்பது நமது மத்திய அரசின் திட்டம். இதில் காங்கிரஸ் அரசுக்கும் இப்போது மத்தியில் வீற்றிருக்கும் பாசிச பரிவார, பாரதீய அரசுக்கும் இடையில் எந்த வேற்றுமையுமில்லை. இந்த பொது திட்டத்தின் கீழ் அங்குள்ள முஸ்லிம்களை பல்வேறு சாக்குப்போக்குகளின் கீழ் படுகொலை செய்துவருகின்றார்கள் நமது இராணுவத்தினர். அல்லது காணமலாக்கி வருகின்றார்கள்.

இப்படி படுகொலை செய்யப்பட்டு ஆதரவற்று நிற்கும், குடும்பங்களுக்கு சிலபல உதவிகளைச் செய்து கொண்டிருந்தார்கள் முஹம்மது அமீன் வானியும், லத்தூஃப் ரஹ்மானும். இதனை பொருத்துக்கொள்ள இயலவில்லை நமது இராணுவத்தினரால். இந்த இரண்டு பேர் மீதும் தீவிரவாதிகளுக்குத் துணை போகின்றார்கள் என்ற பொய்க்குற்றச் சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள். சில நாட்கள் கஷ்மீர் சிறை, பின்னர் திகார் சிறை, என அலைக்கழித்தப்பின், அவர்களுக்குப் பிணை கிடைத்தது. 2003 ஆம் ஆண்டு அவர்கள் பிணையில் வந்தார்கள் ஆனால் வழக்கு கஷ்மீரிலுள்ள "Kathaa" கத்தா என்னுமிடத்திலுள்ள தலைமை மாவட்ட நீதிபதியின் நீதிமன்றத்திற்கு வந்தார்கள்.

நீதிமன்றத்திற்கு வந்தவர்களை உளவுத்துறையைச் சார்ந்த இரண்டு பேர் பின்தொடர்ந்து வந்தார்கள். அவர்கள் உங்களை விசாரிக்க வேண்டும். நாங்கள் பத்திரிக்கையாளர்கள் என பம்மாத்துக்காட்டிய அவர்கள் இறுதியில் தாங்கள் பத்திரிக்கையாளர்கள் அல்ல. உளவுத்துறையைச் சார்ந்தவர்கள் என்றும் மறுத்தால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டினார்கள்.

மிரட்டலுக்கு அஞ்சாத அமீன்வானி ஓடிச்சென்று அந்த நீதிமன்றவளாகத்தில் நின்றிருந்த தன் வழக்கறிஞரிடம் நடந்ததை சொன்னார். வழக்கறிஞர் உடனேயே நீதிமன்ற பார்வைக்கு அதனைக் கொண்டு சென்றார். முஹம்மத் அமீன்வானிக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கான மனுவும் உடனேயே தராததால் பாதுகாப்பு வழங்கிடும் உத்தரவு தான் பிறப்பிக்க இயலாது. ஆனால் அமீன்வானியின் உயிருக்கு ஆபத்திருக்கின்றது என்பதை நான் பதிவு செய்து கொள்கிறேன். இஃது உங்களுக்குப் பின்னால் உதவி செய்யும் என்றார் - நீதிபதி.

ஆனாலும் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே அமீன் வானியும், அவருடைய நண்பர் லுத்துஃபுற் றஹ்மானும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கக் இருவரையும் டெல்லியில் வைத்து வெடி பொருள்களுடன் கைது செய்ததாக தொலைக்காட்சிகளில் காட்டினார்கள். அமீன்வானியை டெல்லியுள்ள சாந்தினி சவுக்கில் வைத்து கைது செய்ததாகவும் அதுவும் காலை 9.30 மணிக்குக் கைது செய்ததாகவும், அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் லுத்துஃப் ரஹ்மானை மாலை 6.30 மணிக்குக் கைது செய்ததாகவும், குடியரசு தினநாளை அதாவது ஜனவரி 26 ஆம் நாளில் டெல்லி தகர்க்கப்படவிருந்ததாகவும், அதை காப்பாற்றி விட்டதாகவும் கதை கட்டினார்கள். அந்தக் கதையைத்தான் அத்தனை அலங்காரத்தோடும் தொலைக்காட்சிகள் நமக்கு விற்பனை செய்து கொண்டிருந்தன.

குடியரசு தினத்தன்று ஏதேனும் ஒரு விருதும், பணமும், பதவி உயர்வும் கிடைக்கும் என்றுதான் இத்தனை ஏற்பாடுகளையும் செய்தார்கள். ஆனால் முஹம்மத் அமீன் வானியின் வழக்கறிஞர் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில், பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மணு அத்தனையையும் ஒன்றுமில்லாமலாக்கிவிட்டது. டெல்லி சிறப்புக் காவல்துறை அதிகாரிகளும் நமது மத்திய உளவுத்துறையைச் சார்ந்தவர்களும் டெல்லியுள்ள சிறப்பு நீதிமன்றத்தைத் தங்கள் சட்டைப்பைக்குள் வைத்திருக்கின்றார்கள். அதனால் அந்த நீதிமன்றம் முஹம்மத் அமீன் வானி மீதும் லுத்துஃப் ரஹ்மான் மீதும் புணயப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் வரிவிடாமல், நிரூபிக்கப்பட்டன எனக்கூறி இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கினார்கள்.

ஆனால் உயர் நீதிமன்றத்தில் அமீன்வானி, லுத்துஃப் ரஹ்மான் ஆகியோர் சார்பில் தனித்தனியாக வழக்கறிஞரிகள் வைக்கப்பட்டார்கள். அவர்கள் வழக்கை திறம்பட நடத்தினார்கள். அதனால் வானியும், லுத்துஃப் ரஹ்மானும் வழக்கிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டார்கள்.

வழக்கறிஞரின் விவாதங்கள்

குற்றம் சுமத்தப்பட்ட முஹம்மத் அமீன் வானிக்காக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அசோக் அகர்வால் என்ற வழக்கறிஞர் வாதாடினார். லுத்துஃப் ரஹ்மானுக்காக சித்தார்த் லுதரா என்ற வழக்கறிஞர் வாதாடினார். வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் இருவர் புனையப்பட்டிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்த வழக்கறிஞர்கள் உணர்வும், ஆர்வமும் பொங்கிட அந்த அப்பாவி முஸ்லிம்களுக்காக தங்கள் வாதங்களை வைத்தார்கள்.

வெடி பொருளின் நிறம்

முஹம்மத் அமீன் வானியிடமிருந்து 1.610 கிலோ எடையுள்ள பி..டி.என் [PETN] என்ற வகை வெடிபொருள்களைக் கைப்பற்றியதாக கதை. அந்த வெடிபொருட்கள் பிரவுன் [Brown] நிறம் என்று அடித்துக் கூறினார்கள் டெல்லி சிறப்பு காவல்துறையைச் சார்ந்தவர்கள். அதில் துணை கமிஷனர் சஞ்சீவ் குமார் யாதவ் தான் இதை அறுதியிட்டு உறுதியாக கூறினார். இதை கூறும்போது நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையல்லாமல் வேறெதுவுமில்லை. என்று தன்னுடைய வேத புத்தகத்தின் மேல் கைவைத்துக் கூறினார்.

ஆனால் அவரே தயாரித்த சாட்சிகளில் ஒருவர் வெடிபொருள்கள் கருஞ்சிவப்பாக இருந்தது என்று கூறினார். அவரும் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையில்லாமல் வேறோன்றுமில்லை என அடித்துக் கூறினார். இருதியில் வெடிபொருள்களைச் சோதிக்கும் நிபுணர்கள், தங்கள் விஞ்ஞான சோதனையின் முடிவை நீதிமன்றத்தில் சொன்னார்கள். அதில் அவர்கள் வெடிபொருள் வெள்ளை நிறத்தில் இருந்தது என்றார்கள். வெடிக்கும் தன்மையுள்ள சில் பொருட்களும் உடனிருந்தது என்றார்கள். அதாவது வெள்ளை நிறத்தில் இருந்ததெல்லாம் வெடிபொருள் அல்ல. வெடிக்கும் தின்மையுள்ள பொருள்களையும், கலந்த கலவை அவ்வளவுதான்.

இதேபோல் கலவைகளை உருவாக்கி அப்பாவி மிஸ்லிம்களின் ஆயுளை பறிப்பதில் நமது உளவுத்துறை மற்றும் டெல்லி சிறப்புக்காவலர்களுக்கு இணையாக யாருமில்லை. இப்போது முஹம்மத் அமீன் வானி, லுத்துஃப் ரஹ்மான் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களின் நிரம் என்பதற்கு மூன்று வகையான வருணங்கள் வரவே நீதிபதி தானே அந்த வெடிபொருளை ஒருமுறை பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். ஆகவே வெடிபொருளைக் கொண்டுவந்து என்னிடம் காட்டுங்கள் எனக் கேட்டார்கள். அதற்கு சற்றும் தாமதிக்காமல் அந்த வெடிபொருள்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது தீப்பிடித்து விட்டது எனக்கூறினார்கள்.

கூண்டேறி சாட்சியம் சொன்ன டெல்லி சிறப்புக்காவல்துறை ஆணையரும், அவருக்காக வாதாடிய அரசு வழக்கறிஞரும். அப்படியானால் சாம்பலைக் கொண்டு வாருங்கள் என்றார் நீதிபதி அவர்கள். நீதிபதி அவர்கள் உண்மையைக் கண்டுப்பிடிப்பதில் இவ்வளவு கூர்மையாக இருபபர் என எவரும் நினைக்கவில்லை. திக்குமுக்காடி போனார்கள் டெல்லி சிறப்புக் காவல்துறையைச் சார்ந்தவர்கள். அதுபோலவே சிலையாக நின்றார் அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர். அவர் பெற்ற பணம் அத்தனையும் கஜனாவிற்கு பாழ்.

வேர்த்து வெளுத்து போய் நின்ற அரசு தரப்பு "ஆசாமி"களிடம், நீதிபதி அவர்கள் இன்னொரு கேள்வியையும் கேட்டார். நீதிபதியின் பெயரால் கேட்கின்றேன் பதில் கூறுங்கள். வெடிபொருள்கள் எறியும்போது வெடிக்காதா? - சொற்றால் அடித்த பிண்டங்களாக நின்று கொண்டிருந்தார்கள், பொய்களை வழக்காக ஜோடித்து முஸ்லிம் இளைஞர் வாழ்க்கையை பாழாக்கிடுவதையே தொழிலாகக் கொண்ட மாதோன் மந்தர்கள்.

ஹவ்வால பணம்

முஹம்மத் அமீன் வானியைக் கைது செய்திடும்போது, ரூபாய் 4,50,000 - கையோடு கைப்பற்றியதாக, நமது டெல்லிக் காவல்துறையினர் கதைவிட்டார்கள். இதை ஹவ்வால பணத்தை காலையில் அதாவது முஹம்மத் அமீன் கைது செய்யப்பட்ட 9.30 மணிக்கு முன் டெல்லியுள்ள சாந்தினி சவுக் என்ற இடத்தில் ஒரு ஹவ்வாலா வியாபாரிடம் வாங்கியது சத்தியம் செய்து கூறினார்கள் டெல்லி சிறப்புக் காவலர்கள்.

ஆனால் டெல்லி சிறப்புக் காவலர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த காவலர்கள் சாட்சியங்கள் ஹவ்வாலா பணத்தை டெல்லியிலுள்ள ஆதார்ஸ் நகரில் வைத்து முஹம்மத் அமீன் வாங்கியதாகக் குறிப்பிட்டார்கள். தாங்கள் சொன்ன பொய் அம்பலமாகப் போனபோது டெல்லி சிறப்புக் காவலர்கள் அந்தர் பல்டி அடித்தார்கள். பணம் ஆதார்ஸ் நகரில் வைத்து வாங்கப்பட்டதுதான் என்றார்கள். அப்படியானால் நீங்கள் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், சாந்தினி சவுக் எனக் குறிப்பிட்டிருக்கின்றீர்களே வழக்கறிஞர்கள் கேட்டபோது அது டைப்பிங் "மிஸ்டேக்" தட்டெழுத்துப் பிழை எனக் கூறி சமாளித்தார்கள் உங்களுடைய வாதங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. என்றார் நீதிபதி அவர்கள்.


அத்தோடு இந்தக் குழப்பத்தைத் தீர்த்திட நீங்கள் அந்த ஹவ்வாலா வியாபரியை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்த முடியுமா? என்றார்கள் நீதிபதி! முடியாது என்றார்கள் டெல்லி சிறப்புக் காவலர்கள். இதனை கேட்ட நீதிபதி நீங்கள் அவரைக் கைது செய்யவில்லையா? எனக் கேட்டார்கள். இல்லை என்றார்கள் வழக்கை முஸ்லிம்கள் மீது ஜோடித்த காவலர்கள். இப்போது அவர்களும் அரசு வழக்கறிஞரும் தோட்டத்துத் தொழும்பர்களாக நின்று கொண்டிருந்தார்கள்.




- M.G.M